Chandrababu Naidu: ``மூன்று மொழிகளையல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன்'' - சந்திரபாபு ...
கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வரும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர்
ஜோர்டான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவணந்தப்புரத்தின் தும்பா பகுதியைச் சேர்ந்த தாமஸ் கேப்ரியல் பெரேரா எனும் நபர் தனது உறவினரான எடிசன் என்பவர் உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து கடந்த பிப்.10 அன்று ஜோர்டான் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு எல்லையைக் கடக்க முயன்றனர். அப்போது, ஜோர்டான் ராணுவத்தினர் அவர்களை பிடித்த நிலையில் அவர்களிடமிருந்து தாமஸ் கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகிய இருவரும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கேப்ரியலின் தலையில் குண்டு பாய்ந்து அவர் பலியானார். மேலும், எடிசனின் காலில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் அவருக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் இந்தியாவிற்கு திரும்பி அனுப்பப்பட்டார்.
இதையும் படிக்க:சத்தீஸ்கரில் 13 மாதங்களில் இவ்வளவு தொழிற்சாலை விபத்துகளா?
கடந்த மார்ச்.1 அன்று கேப்ரியலின் மரணத்தை உறுதி செய்து அவரது குடும்பத்தினருக்கு இந்தியத் தூதரகம் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான செலவை அவரது குடும்பத்தினர்தான் வழங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது உடலை விரைந்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜோர்டானிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சதீஸன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜோர்டான் நாட்டிற்கு சட்டபூர்வமான 3 மாத விசாவில் சென்ற கேப்ரியல் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினரால் அவரது உடலை தாயகம் கொண்டு வரும் செலவுகள் ஏற்க இயலாது எனவே அதற்கான செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.