"கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்" -மு.க.ஸ்டாலின்
தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதுதான் இப்போது போட்டியாக இருக்கிறது.
வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டமாக மக்களைச் சந்தித்து வரும் விஜய்க்கு கூட்டம் கூடி வருகிறது. இந்தக் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது. கொள்கை கூட்டம் - ரசிகர்கள் கூட்டம் என்றெல்லாம் விவாதித்து வருகின்றனர்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
— TVK Vijay (@TVKVijayHQ) September 21, 2025
வணக்கம்.
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.
இரண்டாவது…
அரசியலில் பலரும் விஜயகாந்த், சிரஞ்சீவி, சரத்குமார், கமல் என எல்லோருக்கும் ரசிகர்கள் கூட்டம் வந்திருக்கிறது. ஆனால், அவையெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் சந்தேகம் என்று மறைமுகமாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவினரும் மாநாடுகள், கூட்டங்கள் நடத்தி தங்கள் கூட்டத்தையும், பலத்தையும் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.
கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!#ஓரணியில்_தமிழ்நாடுpic.twitter.com/CdrcMIti2p
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 22, 2025
அவ்வகையில் திமுக 'ஓரணியில் தமிழ்நாடு', 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்' என திருச்சி, திருவாரூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ஆர்.கே.நகர், விருதாச்சலம், காஞ்சிபுரம், விருதுநகர் எனப் பல்வேறு தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறது.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!" என்று கூறியிருக்கிறார்.
'யார் பெருசுனு அடுச்சுக் காட்டு' என போட்டா போட்டியாக நடந்து வரும் கூட்டம் சேர்க்கும் கட்சிகளின் மாநாடுகள், பொதுக்கூட்டங்களின் கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs