ஜெ.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!
புது தில்லி: புது தில்லியில் ஜெ. பி. நட்டாவை இன்று(செப். 22) நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். இதற்காக சென்னையிலிருந்து இன்று(செப். 22) பகல் தில்லிக்கு புறப்பட்டுச் சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அங்கு பாஜக தலைவர் ஜெ. பி. நட்டாவுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், செய்தியாளர்களுடன் பேசிய அவர், “மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவே நட்டாவைச் சந்தித்துப் பேசினேன். அந்தப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, நடைப்பயணமும் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தேர்தல் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது” என்றார்.
தில்லியிலுள்ள ஜெ. பி. நட்டாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் உடனிருந்தார்.