மதுரை ஆதீனம் கார் விபத்து; கொலை முயற்சியா? - காவல்துறை சொல்வது என்ன?
கோடை விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறை காரணமாக உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.
தமிழர்களின் கட்டடக்கலைக்கும் - சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வரும் பெரிய கோயிலைக் காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஒரே ஓவரில் 33 ரன்கள் அளித்த கலீல் அகமது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?
தற்போது கோடை விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை புரிந்து பெரிய கோயியில் அழகைக் கண்டு ரசித்து தற்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் நீண்ட வரிசையில் நின்று பெருவுடையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.