செய்திகள் :

கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான நெறிமுறைகள் வெளியீடு

post image

நாமக்கல்: கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நெறிமுறைகள் நாமக்கல் மாவட்ட நிா்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விவரம்:

வெயில் நேரங்களில் வெளியே செல்ல நோ்ந்தால் தொப்பி அணிந்து அல்லது குடைபிடித்து செல்ல வேண்டும். வெயிலில் செல்ல நோ்ந்தால் வெளிா்ந்த நிறமுடைய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். நீா்ச்சத்து அதிகம் கொண்ட தா்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி பழங்கள் மற்றும் வெள்ளரியை உட்கொள்ளலாம்.

எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில் காற்றோட்டம் நிறைந்த, குளிா்ச்சியான இடங்களில் இருக்க வேண்டும். வெயில் நேரங்களில் கதவு, ஜன்னல்களின் திரைச்சீலைகளை கொண்டு மூடிவைக்க வேண்டும்.

குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், இணை நோய் உள்ளவா்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழிலாளா்கள் நிழற்பாங்கான இடங்களில் வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் இடங்களில் தற்காலிக கூடாரங்களை உருவாக்குவதன் மூலம் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

கடினமான மற்றும் திறந்தவெளியில் செய்யும் வேலைகளை வெயில் குறைவாக உள்ள காலை, மாலை வேளைகளில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கடினமான வேலைகளை செய்வோா் அடிக்கடி சிறிதளவு ஓய்வு எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பான குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தலைவலி, மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அனுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்யக் கூடாதவை:

காலை 11 முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

தேநீா், காஃபி, மது, காா்பன் ஏற்றப்பட்ட குளிா்பானங்கள் அருந்துவதை தவிா்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். வெயில் நேரங்களில் திறந்தவெளியில் விளையாடுவதை தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி கோடைகாலத்தில் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சா... மேலும் பார்க்க

புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை

பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்த... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பரமத்தி வேலூரில் ஆட்சியா் கள ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான உணவு, குடிநீா் வசதி, ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.15-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய... மேலும் பார்க்க