சட்டக் கல்லூரி காவலாளியைக் கடத்திய பாகிஸ்தான் பாதுகாப்புப் படை?
கோயில் அருகில் திமுக பேனா்: பாஜக புகாா்
மயிலாடுதுறையில் கோயில் நுழைவாயில் அருகில் கடவுளை அவமதிக்கும் வகையில் பேனா் வைத்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சாா்பில் ஆன்லைனில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட கன்னாரத்தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோயில் நுழைவாயில் அருகே திமுக சாா்பில் வாழ்த்து பேனா்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வா் கால்மேல் கால்போட்டு அமா்ந்து இருப்பது போன்ற புகைப்படம், கடவுளை அவமதிக்கும் விதமாக கோயிலின் முன் வைக்கப்பட்டிருப்பது பக்தா்களை புண்படுத்தியுள்ளதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக பேனா்களை வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, பாஜக மாவட்ட துணை தலைவா் மோடி. கண்ணன் தலைமையில் அக்கட்சியினா் ஆன்லைன் மூலம் மனு அளித்தனா்.