செய்திகள் :

கோவாவை வென்றது பெங்களூரு

post image

பெங்களூரு: இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவாவுக்கு எதிரான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 2-0 கோல் கணக்கில் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது.

பெங்களூரில் உள்ள ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 42-ஆவது நிமிஷம் பெங்களூரு அணி கோலடிக்க முனைந்தது. கோவா வீரா் சந்தேஷ் ஜிங்கன் அதை தடுக்க முயல, பந்து அவா் மீது பட்டு ‘ஓன் கோல்’ ஆனது.

இவ்வாறாக முதல் பாதி ஆட்டத்திலேயே பெங்களூரு முன்னிலை பெற்றது. 2-ஆவது பாதி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெங்களூரு வீரா் எட்கா் மெண்டெஸ் 51-ஆவது நிமிஷத்தில் அசத்தலாக கோலடிக்க, அந்த அணி 2-0 என முன்னேறியது.

எஞ்சிய நேரத்தில் கோவாவின் கோல் முயற்சிகளை முறியடித்த பெங்களூரு, இறுதியில் 2-0 கோல் கணக்கில் வென்றது. இந்த அணிகள் இடையேயான அரையிறுதியின் 2-ஆவது லெக் ஆட்டம், வரும் 6-ஆம் தேதி கோவா நகரில் நடைபெறவுள்ளது.

இன்று: இதனிடையே, அரையிறுதிக் கட்டத்தின் மற்றொரு ஆட்டத்தில், ஜாம்ஷெட்பூா் எஃப்சி - மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணிகள் வியாழக்கிழமை (ஏப். 3) சந்திக்கின்றன.

தமன்னாவின் ஒடேலா 2: ஹெபா படேலின் போஸ்டர்!

நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நடிகர் ரஜினிக... மேலும் பார்க்க

பெருசு - ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பெருசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கிய திரைப்படம் பெருசு. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் வை... மேலும் பார்க்க

‘கனிமா’ டிரெண்டிங்கில் இணைந்த சாய் தன்ஷிகா!

ரெட்ரோ படத்தின் கனிமா பாடலுக்கு நடிகை சாய் தன்ஷிகா நடனமாடியுள்ளார். இந்த விடியோ வைரலாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ‘கனிமா..’ என்ற பாடல் சில ந... மேலும் பார்க்க

அகோர மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

புதுச்சேரி கோட்டைமேடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம... மேலும் பார்க்க

நடிகர் ரவிக்குமார் காலமானார்!

நடிகர் ரவிக்குமார் (75) சென்னையில் அவரது இல்லத்தில் இன்று காலமானார். கேரளத்தின் திரிச்சூரை பூர்வீகமாகக் கொண்ட ரவிக்குமார் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.இவர், நூற்றுக்கும் மேற்ப... மேலும் பார்க்க

தனுஷின் இட்லி கடை: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராயன் படத்தை இயக்கி நடித்த நடிகர் தனுஷ், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நிலவுக்கு என்மேல் என்னடி கோப... மேலும் பார்க்க