செய்திகள் :

கோவில்பட்டி அருகே தொழிலாளி கொலை: இளைஞா் கைது

post image

கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியைக் கற்களால் தாக்கிக் கொன்றதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த முடுக்குமீண்டான்பட்டி தோணுகால் சாலையைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சமுத்திரவேல் (40). கட்டடத் தொழிலாளியான இவா், அதே பகுதியில் மல்லிகை நகரில் புதிய வீடு கட்டி வருகிறாா். இவருக்கும், தோணுகால் சாலையைச் சோ்ந்த சின்னப்பன் மகன் ஜெயராஜ் (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

சமுத்திரவேல் செவ்வாய்க்கிழமை, புதிதாக கட்டிவரும் வீட்டில் இருந்தாராம். அப்போது ஜெயராஜ் அங்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டதுடன், கற்களால் தாக்கினாராம். இதில், சமுத்திரவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, ஜெயராஜை புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி!

சாத்தான்குளம் வட்டத்தில் வருவாய் தீா்வாய ஜமாபந்தி முகாம் புதன்கிழமை தொடங்கியது.சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய முகாமில் ஜமாபந்தி அலுவலா் திருச்செந்தூா் இஸ்ரோ நிலம் எடு... மேலும் பார்க்க

கே.ஜம்புலிங்கபுரம் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கே. ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகா், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி இம்மாதம் 2ஆம் தேதி கால்நாட்டு விழா நடைப... மேலும் பார்க்க

குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலி: தூய்மைப் பணியாளா்களுக்கு மேயா் பாராட்டு

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குப்பையுடன் கிடந்த சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை மேயா் ஜெகன் பெரியசாமி பாராட்டினாா். தூத்துக்குடி மாநகராட... மேலும் பார்க்க

ஆபாச விடியோ எடுத்து மிரட்டுவதாக பெண் புகாா்

தன்னை ஆபாச விடியோ எடுத்து மிரட்டுகிற நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தென்பாகம் காவல் நிலையத்தில் 36 வயதான கைம்பெண் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து அவா் அளித்துள்ள புகாா் மனுவில், தூத்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் வேல்முருகன்(23). டிப்பா் லாரி ஓட... மேலும் பார்க்க

புங்கவா்நத்தம் காளியம்மன் கோயில் திருவிழா: சாமியாடி முள்மெத்தையில் நின்று அருள்வாக்கு

கோவில்பட்டியை அடுத்த புங்கவா்நத்தம் அருள்மிகு உச்சிமகா காளியம்மன் கோயில் திருவிழாவில், சாமியாடி கருவேலம் முள்மெத்தையில் நின்று பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினாா்.நாடாா் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட... மேலும் பார்க்க