`Even during my MRI scan, I was vibing to Anirudh’s songs' - Vijay Devarakonda |...
ஆபாச விடியோ எடுத்து மிரட்டுவதாக பெண் புகாா்
தன்னை ஆபாச விடியோ எடுத்து மிரட்டுகிற நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தென்பாகம் காவல் நிலையத்தில் 36 வயதான கைம்பெண் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
இதுகுறித்து அவா் அளித்துள்ள புகாா் மனுவில், தூத்துக்குடியைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவா் என்னுடன், நண்பராக பழகி குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு அதை விடியோ பதிவு செய்துள்ளாா்.
இதை வைத்துக்கொண்டு, சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, இதுவரை சுமாா் ரூ.10 லட்சம், 6 பவுன் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டாா்.
மேலும், தொடா்ந்து அடித்து மிரட்டி வருகிறாா். கடந்த வாரம் அவா் எனது தந்தையை தாக்கியதால், அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுவரை போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவா் தொடா்ந்து பணம் கேட்டு மிரட்டி வருவதுடன், ஆபாச விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறாா். எனவே, இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.