Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா?
குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலி: தூய்மைப் பணியாளா்களுக்கு மேயா் பாராட்டு
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் குப்பையுடன் கிடந்த சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை மேயா் ஜெகன் பெரியசாமி பாராட்டினாா்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சத்திரம் தெருவை சோ்ந்த ஒருவா் தனது சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை தவறுதலாக கழிவு பொருள்களோடு சோ்த்து மாநகராட்சி திடக்கழிவு வாகனத்தில் கொடுத்துவிட்டாா்.
அதை, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தரம் பிரிக்கையில் கண்டறிந்தனா். பின்னா், அதை உரிய நபரிடம் ஒப்படைத்தாா்கள். இந்த நோ்மையான செயலை செய்த தூய்மை பணியாளா்கள், வாகன ஓட்டுநா், கண்காணிப்பாளா் ஆகியோரை மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் அழைத்து, அவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.