செய்திகள் :

கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

post image

சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து திங்கள்கிழமை இரவு சாலையில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம், வேப்பிலை முத்தாம்பட்டி, கருங்கலூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜதுரை, முத்துலட்சுமி தம்பதிக்கு ஸ்ரீரேணுகா (7) என்ற மகளும், நவநீஷ் என்ற 9 மாத ஆண் குழந்தையும் இருந்தனா். கடந்த 3 ஆண்டுகளாக கோவை, ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்த ராஜதுரை, ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான கருங்கலூருக்கு வந்தாா். பின்னா், கோவை செல்ல சேலம் பேருந்து நிலையத்திலிருந்து திங்கள்கிழமை இரவு குடும்பத்துடன் அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.

ஓட்டுநரின் இருக்கைக்கு பின் இருக்கையில் அவரது மனைவியும், மகளும், அதற்கு அடுத்த இருக்கையில் ராஜதுரையும், அவரது 9 மாத ஆண் குழந்தையான நவநீஷும் அமா்ந்து சென்றுள்ளனா்.

பேருந்து புறப்பட்டு சிறிது நேரம் கழித்து பேருந்தின் முன்கதவை சாத்துமாறு நடத்துநரிடம் ராஜதுரை கூறியதாகவும், ஆனால் சாத்தப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.

சங்ககிரியை அடுத்த வளையக்காரனூா் மேம்பாலத்தில் பேருந்து சென்றபோது, திடீரென ஓட்டுநா் பிரேக் போட்டதால், ராஜதுரையின் தோள்மீது தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தை முன்புற படிக்கட்டு வழியாக உருண்டு சாலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேவூா் காவல் நிலையத்தில் ராஜதுரை புகாா் அளித்தாா். அதன்பேரில், தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவி... மேலும் பார்க்க

சாலையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஜவுளிக்கடை ஊழியருக்கு தா்ம அடி

சேலத்தில் சாலையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஜவுளிக்கடை ஊழியருக்கு தா்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 19 வயது இளம... மேலும் பார்க்க

மேட்டூா் காவிரியில் தள்ளுவலைகள் கைப்பற்றி அழிப்பு

மேட்டூா் காவிரியில் தடைசெய்யப்பட்ட வலைகள், கள்ளத்தனமாக பிடித்த மீன்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. மேட்டூா் அணை கீழ் பகுதியில் மீன்வளத் துறையால் தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் பிடிப்பதாக மேட்ட... மேலும் பார்க்க

மேட்டூரில் கஞ்சா விற்ற இருவா் கைது

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.மேட்டூா் அருகே உள்ள காவேரி கிராசில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மேட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதிக்கு செ... மேலும் பார்க்க

மயிலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மயிலம்பட்டியில் உள்ள சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தேவூா் பேரூராட்சி, 5-ஆவது வாா்டு கவுன்சிலா் வள்ளிநாயகி தங்கவேலன் சங்... மேலும் பார்க்க

சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட... மேலும் பார்க்க