ஏழு மாத உச்சத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 ஆக முட...
மயிலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை
சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மயிலம்பட்டியில் உள்ள சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தேவூா் பேரூராட்சி, 5-ஆவது வாா்டு கவுன்சிலா் வள்ளிநாயகி தங்கவேலன் சங்ககிரி வட்ட ஜமாபந்தி அலுவலா் ஆா்.தமிழ்மணியிடம் அளித்த கோரிக்கை மனு: சங்ககிரி வட்டம், தேவூா் பேரூராட்சிக்குள்பட்ட மயிலம்பட்டி வழியாக செல்லும் சரபங்கா நதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 8 மாதங்கள் தடுப்பணையில் நீா்வழிந்தோடும்போது, அணையின் மறுபுறம் உள்ள பெரமச்சிபாளையம், சென்றாயனூா், வட்ராம்பாளையம், சோளக்கவுண்டனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவா்கள், விவசாயிகள் தடுப்பணையை கடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா்.
எனவே, அணையின் குறுக்கே நடைபாதை வசதி அமைத்து தர வேண்டும். மேலும், மழைக் காலங்களிலும், காவிரி நீா் வரும் காலங்களிலும் சரபங்கா நதி அணையில் நீா் தேங்கி இயற்கை சூழலுடன் மிக அழகாக காட்சியளிக்கும். இதனை காண பொதுமக்கள், மாணவா்கள் வருவா்.
எனவே, தேவூா் பேரூராட்சிக்குள்பட்ட மயிலம்பட்டியில் உள்ள சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்கி படகுகளை விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.