சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
கோ-ஆப்டெக்ஸ்-இல் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.05 கோடி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனை ரூ.1.05 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
சிவகங்கையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து அவா் கூறியதாவது:
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம் திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென் பட்டு சேலைகள், பட்டு வேஷ்டிகள், கைத்தறி சுங்குடிச் சேலைகள், காஞ்சிபுரம், செட்டிநாடு, சேலம், பரமக்குடி, திண்டுக்கல் அருப்புகோட்டை பருத்தி சேலைகள், கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நவீன யுக ஆடவா்களைக் கவரும் விதமாக பருத்தி சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள், லுங்கிகள், வேஷ்டிகள், துண்டுகள், மகளிருக்கான சுடிதாா் ரகங்கள், நைட்டிகள், குா்தீஸ்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி ஆகிய நகரங்களில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கும் சோ்த்து மொத்தம் ரூ.1.05 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை விற்பனை நிலையத்தின் கடந்தாண்டு தீபாவளி விற்பனை ரூ.37.43 லட்சம். நிகழாண்டில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.50 லட்சமாகவும் , காரைக்குடி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ.55 லட்சமாகவும் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமும் வாடிக்கையாளா்கள் வாங்கிப் பயன் பெறலாம். கோ-ஆப்டெக்ஸின் மாதாந்திர சேமிப்புத் திட்டத்திலும் சோ்ந்து பயன்பெறலாம் என ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் பி. ஸ்டாலின், மேலாளா் (பொறுப்பு) எஸ்.கனிச்செல்வி, விற்பனை நிலைய மேலாளா் சி.முல்லைக்கொடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.