செய்திகள் :

க்ளென் பிலிப்ஸுக்கு மாற்றாக இலங்கை வீரர்!

post image

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸ் காயத்தினால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷானகா தேர்வாகியுள்ளார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தினால் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டார்.

ஒரு போட்டியில்கூட விளையாடாத சிறந்த பேட்டர், ஃபீல்டர், சுழல்பந்துகளை வீசக்கூடிய பிலிப்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டர் என்பது கவனிக்கத்தக்கது.

தற்போது, இவருக்குப் பதிலாக இலங்கையின் ஆல்ரவுண்டர் தசுன் ஷானகாவை குஜராத் அணி தேர்வு செய்துள்ளது.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ஷானகா குஜராத் அணியில் விளையாடினார்.

102 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷானகா 1,456 ரன்கள் 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

குஜ்ராத் அணி ஷானகாவை ரூ.75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜோஸ் பட்லர் அதிரடி: தில்லியை வீழ்த்தியது குஜராத்

ஜோஸ் பட்லரின் அதிரடி காரணமாக தில்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் அதிரடி: குஜராத் டைட்டன்ஸுக்கு 204 ரன்கள் இலக்கு!

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 203/8 ரன்கள் எடுத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தில்லி வீரர்கள் யாருமே அர... மேலும் பார்க்க

சஹால்தான் ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர்: பஞ்சாப் கேப்டன்

பெங்களூரில் நேற்றிரவு மழையின் காரணமாக 14 ஓவர்கள் போட்டியாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 95/9 ரன்கள் எடுத்தது.அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 98/5 ரன்கள் எடுத்து வெற்றி... மேலும் பார்க்க

100-ஆவது ஐபிஎல் போட்டியில் ராகுல் தெவாதியா!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாதியா இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடுகிறார். ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் தெவாதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2014ஆம் ஆண்டு அற... மேலும் பார்க்க

குஜராத் பந்துவீச்சு: தில்லி அணியில் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கம்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கருண... மேலும் பார்க்க

ஆர்சிபியில் இல்லாவிட்டாலும் சின்னசாமி திடலில் தொடரும் சஹாலின் ஆதிக்கம்!

ஆர்சிபி அணிக்கு பெங்களூரிலுள்ள சின்னசாமி திடல்தான் ஹோம் கிரௌண்டாக (சொந்தத் திடல்) இருக்கிறது. இந்தத் திடலில் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். ஆர்சிபி அணியில் 2014- 2021வரை ... மேலும் பார்க்க