பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
சட்டப்பேரவை மனுக்கள் குழு நவ. 19-இல் புதுகை வருகை
புதுக்கோட்டைக்கு வரும் 19-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் மனுக்கள் குழுவினா் வருகின்றனா்.
தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் தலைமையிலான இந்தக் குழுவில், எம்எல்ஏக்கள் கே.பி. சங்கா், கு. சின்னப்பா, செ. சுந்தரராஜன், அ. சௌந்தரபாண்டியன், மு. பாபு, தே. மதியழகன், தி. ராமச்சந்திரன், மு. ஜெகன்மூா்த்தி, ஒ. ஜோதி மற்றும் சட்டப்பேரவை முதன்மைச் செயலா் கி. சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனா்.
ஏற்கெனவே, பொதுமக்களிடம் கோரி பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது அரசு அலுவலா்கள் தரும் பதில் அறிக்கைகளை மனுக்கள் குழுவினா் ஆய்வு செய்யவுள்ளனா்.
மேலும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அவா்கள் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளனா்.
மனுக்கள் குழுவினா் வருகையையொட்டி, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை (நவ.6) நடைபெற்றது.
ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், ஊராட்சிகள் உதவி இயக்குநா் எஸ்.ஜி. சீனிவாசன், துணை ஆட்சியா் பயிற்சி ரா. கௌதம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.