பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு நாளை தேனி வருகை
சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) தேனி மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனா்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை, குழு உறுப்பினா்கள், சட்டப் பேரவை செயலக அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ய உள்ளனா். அரசுத் துறைகளில் இந்தியக் கணக்காய்வு, தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கைகளில் உள்ள தணிக்கை பத்திகள் குறித்து கள ஆய்வு ஆய்வு நடைபெற உள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டது.