தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு: 4 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
எப்போதும்வென்றான் அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் முருகன், உதவி ஆய்வாளா் அந்தோணி திலிப், போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அருங்குளம் அருகே கருப்பசாமி மகன் காா்த்திக் (27) என்பவரது கோழிப் பண்ணையில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு சட்டவிரோதமாக வெடிமருந்துப் பொருள்களை வாங்கி பட்டாசுகள் தயாரித்து விற்பதாகத் தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, க. காா்த்திக், விருதுநகா் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் கருப்பசாமி (38), பொன்னுசாமி மகன் சதீஷ்குமாா் (27), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பிரதீப்குமாா் (29) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்; அவா்களிடமிருந்து வெடிமருந்து மூலப்பொருள்கள், பட்டாசு விற்பனைக்காக பயன்படுத்திய மினி சரக்கு வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.