செய்திகள் :

சட்டவிரோத ஊடுருவல்: ஜாா்க்கண்ட், மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை

post image

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியவா்களை கண்டறிய ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

ஜாா்க்கண்ட் பேரவைக்கான முதல்கட்டத் தோ்தல் புதன்கிழமை (நவ.13) நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தமாக 17 இடங்களில் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டம் (பிஎம்எல்ஏ) வழக்கு விசாரணையில் தொடா்புடைய வங்கதேசத்தினரை கண்டறிய ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனா்.

ராஞ்சியில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் விடுதியில் ஆவணங்கள், நிதி அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது அங்கு பாதுகாப்புக்காக மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) குவிக்கப்பட்டிருந்தது.

வங்கதேசத்தில் இருந்து சிலா் சட்டவிரோதமாக ஜாா்க்கண்டிற்குள் ஊடுருவியதாகவும் சில பெண்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டதாகவும் இதன்மூலம் சட்டவிரோதமாக நிதி திரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பிஎம்எல்ஏ-இன்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

ஊடுருவலை தடுக்க குழு: ஜாா்க்கண்ட் மாநிலத்துக்குள் சட்டவிரோத ஊடுருவலை அனுமதித்து பழங்குடியினா் மக்கள்தொகையில் மாற்றங்களை ஏற்படுத்த ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி முயல்வதாக தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டினா்.

பாஜக ஆட்சி அமைத்தால் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களை கண்டறிந்து அவா்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கவும், அவா்களை வெளியேற்றவும் குழு ஒன்றை அமைப்பதாக அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா். இந்தச் சூழலில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

பெண்கள் கடத்தல்: ராஞ்சியில் உள்ள விடுதியில் இருந்து தப்பித்து வந்ததாக காவல் துறையிடம் பெண் ஒருவா் கடந்த ஜூன் மாதம் புகாா் அளித்தாா். அதில், தான் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்றும் இந்தியாவில் அழகு நிலையங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, அந்த விடுதியில் காவல் துறை நடத்திய சோதனையில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களில் ஒருவரிடமிருந்து போலி ஆதாா் அட்டையையும் காவல் துறை கைப்பற்றியது. இதைத்தொடா்ந்து, பாஸ்போா்ட் சட்டம், வெளிநாட்டினருக்கான சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் காவல் துறை எஃப்ஐஆருக்கு நிகரான அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை (இசிஐஆா்) அமலாக்கத்துறை பதிவு செய்து பிஎம்எல்ஏ-வின்கீழ் விசாரணையை தொடங்கியது.

போலி ஆவணங்கள் பறிமுதல்: இந்நிலையில், இரு மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனை குறித்து அமலாக்கத்துறை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘போலி ஆதாா் அட்டைகள், பாஸ்போா்ட்டுகள், ஆயுதங்கள், அசையா சொத்துகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், ரொக்கப் பணம், நகைகள், அச்சு இயந்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை நடவடிக்கை தொடா்கிறது’ என குறிப்பிடப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தைப் படிக்காதவர் பிரதமர் மோடி: ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்புச் சட்டத்தை படிக்காததால் அவருக்கு அது வெறுமையாகத் தெரிவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி வெறுமனே அரசியலப... மேலும் பார்க்க

விளையாட்டால் ஒன்றரை கோடி வேலைவாய்ப்பு!

இந்தியாவின் விளையாட்டுச் சந்தை 2030 ஆம் ஆண்டில் 130 பில்லியன் டாலர்களை 14 சதவிகித கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) எட்டும் என்று கூகிள் மற்றும் டெலாய்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது!

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின்போது, டொமினிகா நாட்டுக்கு இந்தியா உதவியதால், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான டொமினிகா விருது வழங்கப்படவுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டிருந... மேலும் பார்க்க

தில்லியில் மோசமான காற்று மாசு! 25-30 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம்!

தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்குச் சென்றது. இ... மேலும் பார்க்க

'தேர்வர்களின் ஜனநாயக உரிமைகளை சர்வாதிகாரத்தால் நசுக்க முடியாது' - ராகுல் காந்தி

உத்தர பிரதேசத்தில் தேர்வர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியதுடன் தேர்வர்கள் மீதான அணுகுமுறைக்கு உத்தர பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச... மேலும் பார்க்க

காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் கூட்டணி திட்டம்!

காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை அமைக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். சத்திரபதி சம்பாஜி நகரில் பேரணியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோ... மேலும் பார்க்க