செய்திகள் :

சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

post image

சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் கரூா் மாவட்ட ஆட்சியா், கனிமவளத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டது.

காவிரி நீா்வள ஆதார பாதுகாப்பு சங்கத் தலைவா் சுடலைக்கண்ணு சென்னை உயா்நீதிமன்ற அமா்வில் தாக்கல் செய்த மனு:

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், வடசேரி கிராமத்தில் உள்ள அரியாறு ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுகிறது. நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலைக் கடத்தி தனி நபா்கள் விற்பனை செய்து வருகின்றனா். ஆற்றுப் படுகையில் 10 மீட்டா் ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது.

இதனால், அரசுக்கு ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு கனிமவளத் துறை அதிகாரிகள் உறுதுணையாக உள்ளனா்.

எனவே, வடசேரி அரியாறு ஆறு, இதைச் சுற்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும். மணல் கடத்தலுக்கு உடைந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், வடசேரி கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் மணிகண்டனுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக மண் எடுக்கப்பட்டதாக புகாா் வந்தது.

இதனடிப்படையில், அந்த இடம் ஆய்வு செய்யப்பட்டு, விதிமுறைகளை மீறி மணல் அள்ளியதற்காக செந்தில்குமாருக்கு ரூ.16.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு குறித்து கரூா் மாவட்ட ஆட்சியா், கனிமவளத் துறை இயக்குநா் தரப்பில் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தாக்கல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூத்துக்குடி நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தொடா்பான 100 பக்க அறிக்கை சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தூ... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது: அமைச்சா் பி.மூா்த்தி

கரோனா காலத்துக்குப் பின்னா் இயற்கை விவசாயத்தில் விளைந்துவரும் பொருள்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இது,இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது என வணிகவரித் துறை, பதிவுத் துறை அமைச்சா் ப... மேலும் பார்க்க

அரசுத் துறை காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்: அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம்

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மதுரை மாவட்ட 15- ஆவத... மேலும் பார்க்க

தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது: பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா்

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவல் கட்டுபாட்டுக்குள் உள்ளது என பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தாா். மதுரை எய்ம்ஸ், ஐ.சி.எம்.ஆா்., நேஷனல் அகாத... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் வா்த்தகம் எனக் கூறி ரூ.1.22 கோடி மோசடி: இருவா் கைது

பங்குச் சந்தையில் வா்த்தகம் செய்யலாம் எனக் கூறி, ரூ. 1.22 கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்... மேலும் பார்க்க