செய்திகள் :

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டு, பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் வடக்கு அபுஜ்மத் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்குக் கிடைத்தத் தகவலின் பேரில் மாவட்ட ரிசர் காவல் படை, சிறப்பு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று காலை 8 மணி அளவில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, மறைவான பகுதியிலிருந்து நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | மணிப்பூர்: 3 பெண்களின் உடல்கள் மீட்பு!

பதுங்கியிருந்த அவர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் வேட்டையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 197 நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் கான்கெர் மற்றும் நாரயண்பூர் மாவட்டங்களும் அடங்கியுள்ளன. இங்கு, பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக தீவிர நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கடத்தப்பட்ட 6 பேரும் சடலங்களாக மீட்பு!

மணிப்பூரில் கடத்தப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதால் அங்கும் மீண்டு பதற்றம் நிலவுகிறது.மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் ... மேலும் பார்க்க

பாபா சித்திக் கொலை வழக்கு: 24-வது நபர் கைது

பாபா சித்திக் கொலை வழக்கில் 24-வது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி இரவு மூன்று போ் வழிமறித்து... மேலும் பார்க்க

வீட்டை பெங்களூருக்கு மாற்றினால்.. சமூக வலைதளத்தை இரண்டாக்கிய ஸ்ரீதர் வேம்பு பதிவு

பெங்களூருவை உங்கள் வீடாக மாற்றிக்கொண்டால், கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளைகளும் கன்னடம் கற்க வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவால், சமூக வலைதளமே இரண்டாகிக் கிடக்கிறது.பொதுவா... மேலும் பார்க்க

ஜான்சி மருத்துவமனையில் விஐபி வரவேற்பு: காங்கிரஸ் கருத்தும் துணை முதல்வர் பதிலும்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அரசு மருத்துவமனையில், நேரிட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியான நிலையில், அங்கு வந்த தனக்கு விஐபி வரவேற்புக்கான ஏற்பாடுகளை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: வாகனத்தில் இருந்து ரூ.5.55 கோடி பணம் பறிமுதல்

தாணே மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.5.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அ... மேலும் பார்க்க

உ.பி. மருத்துவமனை தீ விபத்து: குழந்தைகளைப் பார்க்க பெற்றோருக்கு அனுமதி மறுப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் சிக்கி, காயங்களுடன் உயிர் பிழைத்த குழந்தைகளை அதன் பெ... மேலும் பார்க்க