பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!
சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலத்தில், 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் கரியாபந்து மாவட்டத்தில், சிறப்பு அதிரடிப் படை மற்றும் சி.ஆர்.பி.எஃப். கோப்ரா படையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இன்று (செப்.11) ஈடுபட்டனர்.
மெயின்பூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில், 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!