வான்வெளியைப் பயன்படுத்தத் இந்திய விமானங்களுக்கு தடை: பாகிஸ்தான்
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் அதிரடி நடவடிக்கை! 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பிஜப்பூர் மாவட்டத்தில் தெலங்கானா எல்லைக்கு அருகிலுள்ள காரேகுத்தா மலைப்பகுதியிலுள்ள காடுகளில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையினால் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மூன்று நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவமானது பஸ்தார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரியளவிலான நடவடிக்கை எனவும் மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மாநில காவல் படை, மத்திய ரிசர்வ் காவல் படை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையில் தெலங்கானா காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் சக்தி வாய்ந்த ராணுவமாகக் கருதப்படும் பட்டாலியன் 1-ஐ சேர்ந்த மூத்த நக்சல்கள் மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்கள் ஆகியோரின் நடமாட்டமுள்ளதாகக் தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், கடந்த ஏப்.21 ஆம் தேதி முதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!