நானும் மனிதன்தான், தவறு செய்திருக்கலாம்: பிரதமர் மோடியின் முதல் நேர்காணல்
சத்தீஸ்கா் உருக்கு ஆலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; ஒருவா் காயம்
சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் காயமடைந்தாா்.
மாநில தலைநகா் ராய்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள முங்கேலி மாவட்டத்தின் ராம்போத் கிராமத்தில் உள்ள தனியாா் உருக்கு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்த இரும்பு சேமிப்புக் கலன் இடிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் சிலா் இடிபாடுகளில் சிக்கினா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், மீட்புப் பணியில் ஈடுபட்டு 2 தொழிலாளா்களை மீட்டனா். அவா்கள் அருகிலுள்ள பிலாஸ்பூா் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மனோஜ் குமாா் எனும் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இடிபாடுகளில் மேலும் இருவா் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவா்களை மீட்பதற்தான பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் விஷ்ணு தியோ சாய், மீட்புப் பணிகளை தொடா்ந்து கண்காணித்து வருவதாக கூறினாா். மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்பாா்வையிட்டனா்.
சுழற்சி அடிப்படையில் 350 தொழிலாளா்கள் பணியாற்றி வருவதாகவும் மதிய உணவு இடைவேளை நேரத்தில் விபத்து நடைபெற்ால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாகவும் தொழிற்சாலை நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.