Vikatan Digital Awards 2025 Redcarpet Part 5 | Vijayvaradharaj, Preethi Asrani, ...
சனிக்கிழமையில் மட்டும் வெளியே வருபவன் நான் அல்ல: விஜயை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி
சென்னை கிழக்கு மாவட்ட முப்பெரும் விழாவில் விஜயின் சனிக்கிழமைதோறும் சுற்றுப்பயணத்தை துணை முதல்வர் உதயநிதி மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக முப்பெரும் விழா வெள்ளிகிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை இன்னும் 2 மாதங்களில் அதிகம் பேருக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 2 முக்கிய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மகளிர் உரிமைத் தொகையை 90 சதவீத மக்கள் மருத்துவத்துக்கு பயன்படுத்துகின்றனர். ஜிஎஸ்டியை குறைத்துவிட்டோம் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் அந்த ஜிஎஸ்டியை 8 ஆண்டுக்கு முன உயர்த்தியது யார். அதுமுதல் நாங்கள் ஜிஎஸ்டிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம். இதனால் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு மக்கள்தான்.
மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் கல்வி நிதியை விடுக்க மாட்டோம் என தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். ரூ.10,000 கோடி நிதி தர மறுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம். நான் சனிக்கிழமை மட்டும் வெளிய வர மாட்டேன். வாரத்தில் நான்கைந்து நாள், வெளியூர்லதான் இருப்பேன்.
அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் கௌர்!
பல மாவட்டங்களுக்குச் செல்கிறேன். பல மாவட்டங்களுக்கு போகும்போது அங்கு கூட்டமாக மக்கள் நிற்பார்கள். மனுக்களுடன் நிற்பார்கள். நிறைய பேர் மனுக்கள் கொடுப்பார்கள் என்றார். 2026 சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறாா்.
ஏற்கெனவே, திருச்சி, அரியலூா், நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய நான்கு மாவட்டங்கள் முடிவுற்ற நிலையில் ஐந்தாவது மாவட்டமாக நாமக்கல்லில் சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா். விஜயின் இந்த சனிக்கிழமை சுற்றுப்பயணத்தை துணை முதல்வர் உதயநிதி மறைமுகமாக விமர்சித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.