செய்திகள் :

சபரிமலையில் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் புதைந்த விவகாரம்; கேரள போலீஸ் DGP கூறுவது என்ன?

post image

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று சபரிமலையில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதற்காக அவர் நேற்று கேரளா வந்தார். இன்று காலை திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பத்தனம்திட்டா கோந்நி பிரமாடம் இண்டோர் ஸ்டேடியத்தைச் சென்றடைந்தார்.

குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி சென்ற நிலையில் ஹெலிகாப்டரின் டயர்கள் ஹெலிப்பேடில் புதைந்தது கண்டறியப்பட்டது. அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தள்ளி மீட்டனர்.

இந்தச் சம்பவத்தால் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் நிலக்கல்லில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. மழை உள்ளிட்ட காரணங்களால் இடம் மாற்றப்பட்டது.

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
ஹெலிகாப்டரில் வந்திறங்கிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

இதுகுறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி ரவாடா சந்திரசேகர் கூறுகையில், "குடியரசுத் தலைவரின் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை. குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி ஹெலிபேட் மிகவும் தாமதமாகத்தான் தயார் செய்யப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக ஏற்கனவே ஒரு இடம் மார்க் செய்யப்பட்டிருந்தது.

அந்த இடத்தில் இருந்து 5 அடி தள்ளி ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது. அந்த இடத்தில் கான்கிரீட் முழுமையாகக் காயாமல் இருந்தது. இதையடுத்து ஹெலிகாப்டரை முன்னோக்கி நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஏற்கனவே தரையிறக்க நிச்சயிக்கப்பட்ட இடத்தை நோக்கி ஹெலிகாப்டரைத் தள்ளி நகர்த்தும் நிலை ஏற்பட்டது. மற்றபடி ஹெலிகாப்டருக்கோ, குடியரசுத் தலைவர் தரையிறங்குவதிலோ எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை" என்றார்.

கான்கிரீட்டில் புதைந்த ஹெலிகாப்டரை தள்ளி மீட்கும் பணி
கான்கிரீட்டில் புதைந்த ஹெலிகாப்டரை தள்ளி மீட்கும் பணி

ஹெலிபேட் தயாராக்கியது பொதுப்பணித்துறையாகும். விமானப்படை ஊழியர்கள் அடையாளப்படுத்திய இடத்தில் கான்கிரீட் மூலம் ஹெலிபேட் ஏற்படுத்தப்பட்டதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இரவு தாமதமாகத்தான் கான்கிரீட் போடப்பட்டதாகவும், விமானப்படை ஊழியர்கள் முன்னிலையில்தான் அனைத்து பணிகளும் நடைபெற்றன எனப் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணன் கூறுகையில், "ஹெலிபேட் கான்கிரீட்டின் பலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. H மார்க் போடப்பட்ட இடத்துக்கு முன்பே ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. புதிய கான்கிரீட் என்பதால் ஹெலிகாப்டரின் வீல் அரை இஞ்ச் கான்கிரீட்டில் புதைந்துவிட்டது" என்றார்.

"சித்தராமையா அரசியல் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் உள்ளார்" - மகன் பேச்சால் சர்ச்சை; பின்னணி என்ன?

கர்நாடகா முதலமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா காங்க... மேலும் பார்க்க

``நெல் மூட்டைகள் தேக்கத்துக்கு மத்திய அரசு தான் காரணம்” - அமைச்சர் சக்கரபாணி

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கு, அருள்மொழிப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ... மேலும் பார்க்க

"காங்கிரஸ் கட்சியை மதிப்பவர்கள் மட்டுமே முதலவராக முடியும்" - மாணிக்கம் தாகூர்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், `வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நின்று செல்லவில்லையே?’ என்ற கேள்விக்கு, ”இதுகுறித்து ரயில்வேத்துறை அமைச்ச... மேலும் பார்க்க

”நானும் குடும்பமும் பிழைப்போமான்னு தெரியல"- தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்-கண்ணீரில் பெண் விவசாயி

டெல்டா மவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக குறுவை அறுவடைப் பணிகள் நடந்து வரும் நிலையில் அரசு முன்கூட்டியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளைத் தொடங்கின. சாக்கு பாற்றக்குறை, நெல் மூட்டைகள் இர... மேலும் பார்க்க