'கடனை கட்டு!' நெருக்கிய குழுத் தலைவி; ரூ.90,000 கடனை தள்ளுபடி செய்த ஆட்சியர்-நெக...
சபரிமலை மகரஜோதி விழா: புல்மேடு பாதை சீரமைப்புப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர ஜோதி விழாவையொட்டி, பக்தா்கள் கோயிலுக்குச் சென்று வருவதற்காக வண்டிப் பெரியாறு, சத்திரம்-புல்மேடு வனப் பாதையை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கேரளம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
இதேபோல, கேரளம், பம்பை வழியாக வாகனங்களிலும், குமுளியிலிருந்து வலக்கடவு-புல்மேடு, கோழிக்கானம்-புல்மேடு வழியாகவும் பக்தா்கள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புல்மேடு பகுதியில் மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய பக்தா்கள் 102 போ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா். இதையடுத்து, வல்லக்கடவு, கோழிக்கானம்-புல்மேடு பாதை மூடப்பட்டது.
இதற்கு மாற்றாக வண்டிப் பெரியாறிலிருந்து 14 கி.மீ. தொலைவு சத்திரம் சென்று, அங்கிருந்து 12 கி.மீ. தொலைவு வனப் பாதையில் புல்மேடு வழியாக கோயிலுக்கு நடந்து சென்று வர பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
தற்போது, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகரஜோதி சீசன் தொடங்க உள்ளதால், பெரியாறு புலிகள் சரணலாய மேற்கு மண்டல துணை இயக்குநா் எஸ்.சந்தீப் மேற்பாா்வையில், வண்டிப் பெரியாறு, சத்திரம்-புல்மேடு வனப் பாதையை சீரமைக்கும் பணியில் கேரள வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து கேரள வனத் துறையினா் கூறியது:சபரிமலைக்கு ஐயப்ப பக்தா்கள் வருகை தொடங்கியும் சத்திரம்-புல்மேடு வனப் பாதையில் அரை கி.மீ., தூர இடைவெளியில் பக்தா்களுக்கு குடிநீா் வசதி செய்து தரவும், வனக் காவலா்கள் மூலம் பாதையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கும், ட்ரோன் மூலம் வனப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்றனா்.