திருவண்ணாமலை மண்சரிவு: ஒருவர் சடலம் மீட்பு! 6 பேர் கதி என்ன?
சபர்மதி ரிப்போர்ட் படத்தை இன்று பார்க்கவிருக்கும் பிரதமர்!
நாடாளுமன்ற வளாகத்தில் சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை மாலை காண உள்ளார்.
இப்படத்தை காண்பதற்காக நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பால்யோகி ஆடிட்டோரியத்திற்கு அவர் செல்லவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சபர்மதி ரிப்போர்ட்’.
இதில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்துள்ளார். உடன் ராஷி கண்ணா, ரித்தி டோக்ரா நடித்துள்ளனர். படத்தை தீரஜ் சர்மா இயக்கியுள்ளார்.
உண்மை வெளிவருகிறது: பிரதமா் மோடி கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ திரைப்படம் குறித்து கருத்து
சோபா கபூர், ஏக்தா ஆர் கபூர், அமுல் வி மோகன், அன்சூல் மோகன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படம் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
முன்னதாக இப்படம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உண்மை வெளிவருவது சிறப்பு’ என்று குறிப்பிட்டிருந்தார்.