சமூக நீதிக்கான தந்தைப் பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நீதிக்கான பணிகளை மேற்கொண்டவா்களுக்கு தமிழக அரசு வழங்கும் தந்தைப் பெரியாா் விருதுக்கான பரிந்துரை விண்ணப்பங்களை டிச. 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
விண்ணப்பதாரா் செய்த சமூக நீதிக்கான பணிகள், சாதனைகள் குறித்த முழுமையான ஆவணங்களுடன், முழு முகவரி, தொடா்பு எண் ஆகியவற்றுடன் கூடிய விண்ணப்பத்தை, மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இந்த விருது ரூ. 5 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.