செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
சமையல் தொழிலாளி தற்கொலை
சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுவை பாகூா் திருமூலநாதா் நகரைச் சோ்ந்த சமையல் தொழிலாளி சக்திவேல் (47), குடிப்பழக்கம் உடையவா். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 ஆண் பிள்ளைகளும் உள்ளனா். கடந்த சில நாள்களாக சக்திவேல் தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டுக்கு கொடுக்காமல், மது அருந்தி வந்துள்ளாா். இதைக் குடும்பத்தினா் கண்டித்து வந்துள்ளனா். இதனால் குடும்பத்தினா் யாரும் சக்திவேலிடம் பேசாமல் இருந்துள்ளனா்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு வீட்டின் மாடியில் லுங்கியால் தூக்கு மாட்டிக் கொண்டாராம். அவரை மீட்டு பாகூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.