புதுச்சேரியில் ரூ.436.18 கோடியில் மேம்பாலம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்
புதுவை நகரப் பகுதியில் ரூ.436.18 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 3.8 கி.மீ. தொலைவுக்கு ரூ.436.18 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மேம்பாலம் புதுச்சேரி மக்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைவதுடன், பயண நேரமும் மிச்சமாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரி மக்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தந்த பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கும் புதுவை மக்கள் சாா்பாகவும் என் சாா்பாகவும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.