செய்திகள் :

சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்

post image

எதிர்க்கட்சித் தலைவராக சம்பலுக்கு செல்வது எனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தில்லியில் இருந்து சாலை வழியாகச் சென்றனர்.

ஆனால், சம்பலில் வெளிஆள்கள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருப்பதை தொடர்ந்து, உத்தரப் பிரதேச எல்லையில் ராகுல் உள்ளிட்டோரின் கார்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து ராகுல் காந்தி பேசியதாவது:

“நாங்கள் சம்பலுக்கு செல்ல முயற்சிக்கிறோம். ஆனால், காவல்துறையினர் தடுத்துள்ளனர். எங்களை முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக அப்பகுதிக்குச் செல்வது எனது உரிமை. ஆனால், அவர்கள் என்னை நிறுத்தியுள்ளனர்.

நான் தனியாகச் செல்லத் தயார். மாநில போலீஸுடன் செல்லவும் தயார். ஆனால், அந்த கோரிக்கையையும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். சில நாள்கள் கழித்து வருமாறும், அப்போது அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இது எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது. நாங்கள் சம்பலுக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது எனப் பார்க்க வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும்.

அரசியலமைப்பில் உள்ள எனக்கான உரிமையை கொடுக்க மறுக்கின்றனர். இதுதான் புதிய இந்தியா, அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இந்தியா. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தின் முடிவுக்கு கொண்டுவருவதற்கான இந்தியா. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ராகுலுக்கு உரிமை உள்ளது: பிரியங்கா காந்தி

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தில்லிக்கே திரும்பிச் சென்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும் அதனை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மசூதி கள ஆய்வு செய்யப்பட்டபோது மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.

அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.

மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, பதற்றத்தை தணிக்கும் வகையில் அரசியல் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் உள்பட வெளி ஆள்கள் நுழைய சம்பல் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்: ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

நமது நிருபர்உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.இந்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு

நமது நிருபர்"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்... மேலும் பார்க்க

தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உண... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?

நமது நிருபர்மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா காலத்தின்போது இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா என்று மக்களவையில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உற... மேலும் பார்க்க

"டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்

நமது நிருபர்இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூ... மேலும் பார்க்க

ரயில்வே திட்ட நிலம்: முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்

நமது நிருபர்ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் தொடர்பான விவகாரத்தை தீர்ப்பதற்காக தமிழக முதல்வருடன் ஆலோசிக்க ரயில்வே அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சரையோ அனுப்ப தாம் தயாராக இருப... மேலும் பார்க்க