செய்திகள் :

சம்பல் கலவரத்தன்று நான் ஊரில் இல்லை: சமாஜவாதி எம்பி

post image

சம்பல் கலவரத்தன்று நான் ஊரில் இல்லை என்று சம்பல் சமாஜவாதி எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற சம்பவத்தில் வன்முறையை தூண்டியதாக முதல் தகவல் அறிக்கையில் எம்பி ஜியா-உர்-ரஹ்மான் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமாஜவாதி எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். சம்பவத்தன்று அவர் வெளியூரில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பல் மக்களவைத் தொகுதி சமாஜவாத எம்.பி. ஜியா-உர்-ரஹ்மான் ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

நேற்று உ.பி.யிலும் இல்லை, சம்பலிலும் இல்லை. நான் ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றிருந்தேன். ஆனால், என் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது காவல் துறையினரின் திட்டமிட்ட சதி. இந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் மற்றும் இந்தியாவின் நற்பெயரையும் கெடுத்துள்ளது.

இதையும் படிக்க: அதானியின் ரூ.100 கோடி நன்கொடை.. வேண்டாமென நிராகரித்த முதல்வர்!

திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த சதியில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர். என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சம்பல் வன்முறை தொடர்பாக சமாஜவாதி கட்சியின் எம்பி ஜியா-உர்-ரஹ்மான் மற்றும் சமாஜவாதி எம்எல்ஏ இக்பால் மெஹ்மூத்தின் மகன் சோஹைல் இக்பால் உள்ளிட்டோர் மீது 7 முதல் தகவல் அறிக்கைகளை( எஃப்.ஐ.ஆர்கள்) காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்!

சச்சின் டெண்டுல்கரின் மகனான 25 வயது இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் அவரது சொந்த மண்ணான மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சியில்..!இன்ற... மேலும் பார்க்க

'அரிசன் காலனி' பெயரை அழித்த அன்பில் மகேஷ்!

நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் 'அரிசன் காலனி' என்ற பெயரை கருப்பு மையால் அழித்து, மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை மாவட்டத்திற்கு நாளை(நவ. 26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத... மேலும் பார்க்க

ரூ.15.08 கோடியில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை: உதயநிதி அறிவிப்பு!

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில்ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலானதடகள ஓடுதளப் பாதைஅமைக்கப்படும்என்று துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி இன்று (... மேலும் பார்க்க

சாம்பல் கலவரம்: சமாஜவாதி எம்பி, எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறை தொடர்பாக சமாஜவாதி கட்சியின் எம்பி ஜியா-உர்-ரஹ்மான் ம... மேலும் பார்க்க

இளஞ்சிவப்பு ஆட்டோ: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களைப் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரசு அ... மேலும் பார்க்க