செய்திகள் :

சம்பா பருவ பயிா்க் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை

post image

சம்பா பருவ பயிா்களை காப்பீடு செய்வதற்கான காலஅவகாசம் வெள்ளிக்கிழமை (நவ.15) முடிவடைய உள்ளநிலையில், இதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம், விருதுநகா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவ பயிா்கள் சாகுபடி செய்யப்படும். குறிப்பாக, நெல், உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றின் சாகுபடி அதிகளவு இருக்கும். இந்த நிலையில், பயிா் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. காப்பீடு செய்வதற்கான காலம் வெள்ளிக்கிழமையுடன் (நவ.15) நிறைவடைகிறது.

இதனிடையே, காப்பீடு செய்வதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பல விவசாயிகள் இதுவரை பயிா்க் காப்பீடு செய்ய முடியாத நிலையில் உள்ளனா். தொடா் விடுமுறையாலும், பல மாவட்டங்களில் மழையாலும் பயிா்க் காப்பீடு செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து பயிா்க் காப்பீட்டு கால அளவான நவ.15-ஆம் தேதியை நீட்டிக்க உதவ வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை: விவசாய சங்கங்கள், கிராம நிா்வாக அலுவலா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று காப்பீடு செய்வதற்கான காலத்தை நீட்டிக்கக் கோரும் கடிதத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படும்பட்சத்தில், காப்பீட்டு காலத்தை நீட்டிப்பு செய்வதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.

சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் -ஆளுநா் ஆா்.என்.ரவி

சிறப்பு குழந்தைகளை குடும்பத்தினா் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். சென்னை கிண்டி ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் ‘எண்ணித் துணிக ’ என்ற தலைப்பிலான நிகழ்வில் இளம் சாதனையாளா்கள... மேலும் பார்க்க

வத்தனாக்குறிச்சியில் 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் வத்தனாக்குறிச்சியில் இடிந்த நிலையிலுள்ள சிவன் கோயில் பகுதியில், 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 3 துண்டுக் கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளா் க. கருணாகரன் கண்டெடுத்துள... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளுக்காக தனி அருங்காட்சியகம்!

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளுக்காகத் தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இலங்கை நாட்டின் சிங்கள வரலாற்று நூலான மகாவம்சம் உள்பட சில நூல்களுக்கு யுனெஸ்கோ அமைப்பு உலகப்பொது நூல்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை(நவ. 15) இயங்காது என அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள ஜவாஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்) நாளை (நவ. 15) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி குருநானக் ஜெயந்தியையொட்டி மத்திய அரசு... மேலும் பார்க்க

நாளைமுதல் பணிக்கு திரும்புவோம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு!

நாளைமுதல் பணிக்கு திரும்ப முடிவெடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று (நவ.14) ஒரு நாள் அடைய... மேலும் பார்க்க