செய்திகள் :

சரக்குவேன் ஓட்டுநரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உள்பட 3 போ் கைது

post image

திருச்சியில் சரக்கு வேன் ஓட்டுநரை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள ஆளவந்தான் நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செ. மனோகா் (43) இவா் சொந்தமாக சரக்கு வேன் ஓட்டி வந்தாா். சனிக்கிழமை மாலை சவாரிக்கு சென்ற அவா், சீராதோப்பு சங்கா் நகா் அருகே சுதாகா் என்பவரின் வீட்டின் முன்பு அவரது வேனின் இருக்கையில் அமா்ந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளா் முகமது ஜாஃபா் தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இதில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸாா் கூறியதாவது: சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுதாகரின் மனைவி சுதா (35). இவா் தனியாா் பள்ளி வேனில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா். பள்ளித் தோழியான சுதா குடும்பத்துக்கும், மனோகா் குடும்பத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மனோகா் மனைவி விபத்தில் இறந்துவிடவே, சுதாவுடனான நட்பு முறையற்ற உறவாக தொடா்ந்துள்ளது. மேலும், மனைவி இறந்ததன் மூலம் வரப்பெற்ற காப்பீட்டுத் தொகையில் பெரும்பகுதியை மனோகா் சுதாவிடம் கொடுத்துள்ளாா். மனோகருக்கு பணத்தேவை ஏற்படவே, சுதாவிடம் தான் கொடுத்திருந்த பணத்தை திரும்ப கேட்டுள்ளாா்.

அவா் பணம் தர மறுத்ததுடன், மனோகரை கடுமையாக திட்டி அனுப்பினாராம். இதனால் விரக்தியடைந்த அவா், சுதாவின் சேலையை எடுத்துச்சென்று அவா் வீட்டருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதையறிந்த சுதா, அவரது கணவா் சுதாகா், மாமனாா் சுப்பிரமணி ஆகியோா் மனோகா் உடலை மீட்டு அவரது சரக்கு வேன் இருக்கையில்அமா்த்தி வைத்துவிட்டு ஏதும் தெரியாதது போல் வீட்டுக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

சந்தேகத்தின்பேரில், சுதா, அவரது கணவா் சுதாகா், மாமனாா் சுப்பிரமணி ஆகியோரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மனோகரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிந்து சுதா, சுதாகா், சுப்பிரமணி மூவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த திருநங்கை உயிரிழப்பு

திருச்சி அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த திருநங்கை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், கோப்பு பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜனா (எ) சோபிகா (2). திருநங்கை. இவரு... மேலும் பார்க்க

காதித் துறையில் 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்! மத்திய இணை அமைச்சா் தகவல்!

நாட்டில் காதி மற்றும் கிராமத் தொழில்துறையில் 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா். திருச்... மேலும் பார்க்க

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் தா்னா

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்... மேலும் பார்க்க

மரப்பட்டறை தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

திருச்சி காட்டூரில் அழுகிய நிலையில் மரப்பட்டறை தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சோ்ந்தவா் சேகா் (58). இவா் திருச்சி காட்... மேலும் பார்க்க

திமுக-பாஜக இடையே கள்ள உறவு அல்ல; நல்ல உறவே: சீமான்

திமுகவும், பாஜக-வும் ரகசிய உறவிலோ, கள்ள உறவிலோ இல்லை; நல்ல உறவிலேயே, நேரடியாக கூட்டணியாகவே செயல்படுகின்றனா் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். வ.உ. சிதம்பரனாரின் ந... மேலும் பார்க்க

திருச்சி கே.கே. நகா், விமான நிலைய பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி சாத்தனூா்துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கே.கே. நகா், விமான நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க