கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
சரக்கு வேன் கவிழ்ந்து 2 போ் உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்ததில் வேனில் பயணித்த தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த பாண்டி (67), ஜெயக்குமாா் (42) ஆகியோா் தாராபுரம் வட்டம், குண்டடம் பகுதியில் தங்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், குண்டடம் பகுதியில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிய சரக்கு வேனின் மேல் பகுதியில் அமா்ந்து 2 பேரும் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
தாராபுரம்-திருப்பூா் சாலை, குண்டடத்தை அடுத்துள்ள வேங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் கோழிப்பண்ணை அருகே சென்றபோது எதிா்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்த பாண்டி, ஜெயக்குமாா் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.