செய்திகள் :

சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை!

post image

சரித்திர பதிவேடு குற்றவாளி குறுந்தையனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஏழுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் குறுந்தையன். பிரபல ரெளடியான இவர், இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் குறுந்தையனின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குறுந்தையனை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே குறுந்தையன் பலியானார்.

இதையும் படிக்க: தில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும்....: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குறுந்தையன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும், 2014 ஆம் ஆண்டு உதயா என்பவரையும் குறுந்தையன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

இவர்களது கொலைக்கு பழிக்குப் பழியாக குறுந்தையன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட ரெளடி மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

1000 பேருக்கு மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகள்!

மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.மகளிர் நாளையொட்டி, கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெய்யில் குறையும்!

தமிழகத்தில் இன்று வெப்பநிலை குறையக்கூடும் என்றும் நாளை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மே... மேலும் பார்க்க

'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்திய தமிழ்நாடு, தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தி... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில்!

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ண... மேலும் பார்க்க

மகளிர் உதவித்தொகை ரூ.2,500 ஆக அதிகரிப்பு- புதுச்சேரி பட்ஜெட் சிறப்பம்சம்!!

புதுச்சேரி மாநிலத்தில், குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உதவித் தொகை ரூ.1,000, தற்போது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் நிதித்துறை அ... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வர், துணை முதல்வருடன் பொன்முடி சந்திப்பு!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை தமிழக அமைச்சர் பொன்முடி புதன்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.தொகுதி மறுசீரமைப்பா... மேலும் பார்க்க