UGC: 'ஓராண்டுக்கு முன்பே படிப்பை முடிக்கலாம்' - யுஜிசியின் புதிய நடைமுறை சொல்வது...
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!
பங்குச்சந்தை இன்று (டிச. 2) சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் முழுக்க பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் இந்த வாரமும் ஏற்றத்துடனே தொடங்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று பங்குச்சந்தை சற்றே சரிவுடன் தொடங்கியிருக்கிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ்
79743.87 புள்ளிகளிலும் நிஃப்டி 23,927.15 புள்ளிகளிலும் தொடங்கியது.
காலை 11.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 40 புள்ளிகள் குறைந்து 79.703.86 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி சற்றே உயர்ந்து 24130.10 புள்ளிகளில் உள்ளது.
இதையும் படிக்க | பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமா் மோடி வாழ்த்து
இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், மாருதி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் விலை உயர்ந்துள்ளன.
அதேநேரத்தில், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎசி வங்கி, இந்துஸ்தான் லீவர், இண்டஸ் இண்ட் வங்கி, ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்துள்ளன.
இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை புள்ளிகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.