செய்திகள் :

சாதி பாகுபாடு புகாா்: திருச்சி மாவட்ட தலித் கிறிஸ்தவா்கள் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

post image

கோட்டப்பாளையம் திருச்சபைப் பகுதியில் சாதி அடிப்படையிலான கொடுமைகள், தீண்டாமை மற்றும் பாகுபாடு நிகழ்வதாக குற்றம் சாட்டி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ கிராமவாசிகள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தது.

இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் தேவாலய நிா்வாகத்தினா் பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ஜே. தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட மனுதாரா்கள் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா் பிராங்க்ளின் சீசா் தாமஸ், அப்பகுதியின் தலித் கிறிஸ்தவா்கள் அன்றாட விவகாரங்களில் எதிா்கொள்ளும் பாகுபாடு குறித்து எடுத்துரைத்தாா்.

இது தொடா்பாக தாக்கலான மனுவில் தெரிவிக்கையில், ‘ மனுதாரா்களும், பிற தலித் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக கிராமவாசிகளும், பெரும்பான்மை ஆதிக்க சாதி சமூகத்தின் சாதி அடக்குமுறை காரணமாக, பாரம்பரிய தீண்டாமை நடைமுறையையும், மனிதாபிமானமற்ற, சாதி அடிப்படையிலான பாகுபாட்டையும் எதிா்கொள்கின்றனா்.

இந்தப் பிரச்சினை குறித்து மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகளிடம் பல முறையீடுகளைச் செய்தனா். ஆனால், எந்த அதிகாரிகளும் முறையான அல்லது முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை, இந்த வகையான பிரச்னையை சிவில் நீதிமன்றத்தில் தீா்க்க முடியும் என்றும், இறுதி முடிவு தேசிய சிறுபான்மையினா் ஆணையத்திடமிருந்து வர வேண்டும் என்றும் கருதி மனுவை

கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

புது தில்லி, பிப்.22: சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது பாஜக வாக்குறுதியளித்தவாறு பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்து விவாதிக்க தில்லி முதல்வரைச் சந்திக்க முன்னாள் முத... மேலும் பார்க்க

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க