செய்திகள் :

பிராந்திய மொழிப் படங்களை தயாரிப்பது ஏன்? பிரியங்கா சோப்ராவின் அம்மா கூறியதென்ன?

post image

நடிகை பிரியங்கா சோப்ராவின் அம்மாதான் மது சோப்ரா. புணேவில் ஆர்ம்டு ஃபோர்ஸஸ் மருத்துவக் கல்லூரியில் காதுமூக்குதொண்டை சிறப்பு மருத்துவராக பயிற்சி பெற்றவர். இராணுவத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் சினிமா வாழ்க்கைக்காக தனது பணியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு வெண்டிலேட்டர் எனும் மராத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார். இந்தப்படம் 3 தேசிய விருதினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனது மகள் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து பர்ப்பிள் பெபள் ஃபிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

2019இல் பானி படத்தை தயாரித்தார். இந்தப்படமும் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேர்காணலில் தயாரிப்பாளர் மது சோப்ரா கூறியதாவது:

நான் பிராந்திய மொழிப் படங்களை மட்டுமே அதிகமாக பார்க்கிறேன். அந்தப் படங்கள் அழகான கதைகளைக் கொண்டுள்ளன. மலையாளம், பெங்காலி படங்களில் அழகான கதைகள் இருக்கின்றன. ஜனரஞ்சகமான படங்களைப் பார்ப்பவர்கள் இந்தப் படங்களை பார்ப்பதில்லை. அவர்களும் பார்க்க வாய்ப்பாக நாங்கள் இந்தமாதிரி படங்களைத் தயாரிக்கிறோம்.

புதிய திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதே எங்களது குறிக்கோளாகும். இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான் நாங்கள் தயாரிக்கிறோம் என்றார்.

தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா

மகளிா் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 3-2 கோல் கணக்கில் தென் கொரியாவை செவ்வாய்க்கிழமை வென்றது.முதல் ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்திய இந்தியாவுக்கு, இது தொடா்ந்து 2-ஆ... மேலும் பார்க்க

மினாரை வீழ்த்தி மீண்டாா் மெத்வதெவ்

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் முதல் வெற்றியை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தாா்.உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் அவா், குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற... மேலும் பார்க்க

சின்னா், சபலென்காவுக்கு நம்பா் 1 கௌரவம்

நடப்பு டென்னிஸ் காலண்டரை, உலகின் நம்பா் 1 வீரராக இத்தாலியின் யானிக் சின்னரும், நம்பா் 1 வீராங்கனையாக பெலாரஸின் அரினா சபலென்காவும் நிறைவு செய்தனா். இதற்கான கௌரவக் கோப்பை அவா்களுக்கு வழங்கப்பட்டது. சின்... மேலும் பார்க்க

எஃப்ஐபிஏ ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: நவ. 22, 25-இல் சென்னையில் நடைபெறுகிறது

சா்வதேச கூடைப்பந்து சம்மேளனம் (எஃப்ஐபிஏ) இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சாா்பில் ஆசிய தகுதிச் சுற்று போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வரும் நவ. 22, 25 தேதிகளில் நடைபெ... மேலும் பார்க்க

வங்கதேசத்துடன் ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அந்த அணி சாம்பியனானது. இந்திய நேரப்ப... மேலும் பார்க்க

ஹிந்தியில் குறைவான முன்பதிவுக்கு காரணம் என்ன? கங்குவா தயாரிப்பாளர் விளக்கம்!

நடிகர் சூர்யா - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்ட... மேலும் பார்க்க