செய்திகள் :

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து! தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

post image

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி இறங்கிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்து திருச்சூர் மாவட்டத்தின் திரிப்ரையாறு நட்டிக்கா பகுதி அருகே இன்று(நவ. 26) அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

கண்ணூரிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்ற டிம்பர் லாரி ஒன்று, நட்டிக்கா பகுதியில் அமைந்துள்ள ஜேகே சினிமாஸ் திரையரங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையிl சென்று கொண்டிருந்தபோது, சாலையிலிருந்து விலகி சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தோர் மீது ஏறி இறங்கியது.

இந்த கோர விபத்தில் இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததும், இதன் காரணமாக லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிந்துள்ள வாலப்பாடு காவல்துறையினர் லாரியில் இருந்த அலெக்ஸ், ஜோஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை 26/11 தாக்குதல்... பலியான வீரர்களுக்கு நினைவஞ்சலி!

மும்பையில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு இன்று தலைவர்களால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதல்மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம... மேலும் பார்க்க

ஹேர் டிரையர் வெடித்த சம்பவத்தில் திடீர் திருப்பம்? விபத்தல்ல கொலை முயற்சி!

பாகல்கோட்: கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியில், ஹேர் டிரையர் வெடித்துச் சிதறியதில், பெண்ணின் கை விரல்கள் துண்டான சம்பவத்தில் திடீர் திருப்பமாக அது விபத்தல்ல என்றும், கொலை முயற்சி என்பதும் தெரியவந்துள்... மேலும் பார்க்க

சபரிமலையில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு!

திருவனந்தபுரம்: கேரளத்தில் 8 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(நவ. 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தமிழகக் கடலோரப் பகுதியை ஒட்டி புயல் சின்னம் உருவாகியுள்ள... மேலும் பார்க்க

ஏழை சமூகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவி அரசியலமைப்பு! ராகுல் காந்தி

ஏழை சமூகத்தை பாதுகாக்கும் சக்திவாய்ந்த கருவியாக அரசியலமைப்புச் சட்டம் உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்... மேலும் பார்க்க

வன்முறைக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய சம்பல்: பள்ளிகள் மீண்டும் திறப்பு!

உத்தரப் பிரதேசத்தின், சம்பல் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைப... மேலும் பார்க்க

விரைவில் வருகிறது க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை! பெறுவது எப்படி?

க்யூ ஆர் கோடு கொண்ட பான் அட்டைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.தற்போது பயன்பாட்டில் உள்ள பா... மேலும் பார்க்க