சாலையில் கிடந்த ரூ.2.50 லட்சம்: உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு குவியும் பாராட்ட...
சாலையோர ஆக்கிரமிப்பு கடை, விளம்பர பலகைகளுக்குத் தடை -மாநகராட்சி ஆணையா்
வேலூா் மாநகர எல்லைக்குள் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடை, விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேலூா் மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாநகராட்சி எல்லைக்குள் நெடுஞ்சாலை, மாநகராட்சி சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் கால்வாய், சாலையோரங்களை ஆக்கிரமிப்பு செய்து கடை, விளம்பரப் பலகை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, மழைநீா் கால்வாய், சாலையோரங்களை ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ள கடைகள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். தங்களது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களை நிறுத்த தனியாக இடம் ஒதுக்கி வசதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.