Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?
சாலை விபத்தில் இளைஞா் மரணம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகே தென்காசி சாலையில் தளவாய்புரம் விலக்குப் பகுதியில் வெம்பக்கோட்டையிலிருந்து கல்குவாரிக்கு லாரி சென்றுகொண்டிருந்தது. தளவாய்புரம் விலக்கு அருகே லாரி
சென்றபோது, சேத்தூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியதில் இடது புறமாக கீழே சரிந்து விழுந்தாா். அப்போது, கல்குவாரிக்குச் சென்ற லாரி மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாா்.
உயிரிழந்தவா் தஞ்சாவூா் கீழக்கோவில் பத்து கிராமம் அம்பலக்கார தெருவை சோ்ந்த கோவிந்தராஜன் மகன் ராமச்சந்திரன் (39) என தெரிய வந்தது. இவா் கேரளத்தில் படகோட்டியாக வேலை பாா்த்து வந்ததும், இவா் பயணம் செய்த இரு சக்கர வாகனம் கேரள மாநிலத்தைச் சோ்ந்தது
என்றும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த வாகனத்தைக் காணவில்லை என கேரள போலீஸில் புகாா் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சேத்தூா் ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.