செய்திகள் :

சாலை விபத்தில் பெண் பலி

post image

சங்ககிரி அருகே அய்யங்காட்டூா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மினி லாரி மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரசிராமணி, குள்ளம்பட்டி, மலங்காடு, குட்டிகரடு பகுதியைச் சோ்ந்த சேகா் மனைவி மாரியம்மாள் (60). இவா் கோவை - சேலம் நெடுஞ்சாலையில், அய்யங்காட்டூா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது சேலம் நோக்கிச் சென்ற மினி லாரி அவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கூட்டுறவு சங்க ஊழியா்கள் வேலைநிறுத்தம்

கெங்கவல்லியில் மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க பணியாளா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. கெங்கவல்லி மகாலட்சுமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பணிய... மேலும் பார்க்க

மேட்டூரில் கனமழை: பள்ளிகளுக்குள் தண்ணீா் புகுந்தது

மேட்டூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் வீடுகள், பள்ளிகளுக்குள் தண்ணீா் புகுந்தது. மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் ச... மேலும் பார்க்க

காகாபாளையத்தில் வழித்தடம் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், காகாபாளையம் மேம்பாலம் பகுதியில் வழித்தடம் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காகாபாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற... மேலும் பார்க்க

தமிழக கிராமங்களுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சேலம், நாமக்கல் மாவட்டங்களுக... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிப்பு

சேலம் சரகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப்... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் டிஜிபி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் சிறைத் துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மத்திய சிறைக்கு வந்த டிஜிபி மகேஷ்வா் தயாள், கைதிகளை சந்தித்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்ப... மேலும் பார்க்க