சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மீன் வளா்ப்பு பயிற்சி!
நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மீன் வளா்ப்பு தொழில்நுட்பம் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) நடைபெறுகிறது.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள மீன் விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த, சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நவீன மீன் வளா்ப்பு தொழில்நுட்பங்கள் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் மீன் வளா்ப்பு விவசாயிகள், பண்ணை மகளிா், கிராம இளைஞா்கள், தொழில் முனைவோா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
விருப்பமுள்ளவா்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் 04365-299806 தொலைபேசி எண்ணில் அல்லது 88388-82451, 98656-23423, 85087-75613 கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு தங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் 50 நபா்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொண்ட நபா்களுக்கு, சொந்த பெயரில் பண்ணைக்குட்டை, குளத்தில் 6 முதல் 10 மாதம் வரை நீா் இருத்தல், ஆழ்துளை கிணறு வசதி உள்ள குளங்களுக்கு முன்னுரிமை ஆகிய நிபந்தனைகளின் படி மீன்குஞ்சுகள் வழங்கப்படும்.