சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தீபாவளி விடுமுறையை ஒட்டி சுற்றுலா தலமான சித்தன்னவாசலில் சனிக்கிழமை திரளானோா் குவிந்தனா்.
புதுக்கோட்டை - விராலிமலை சாலையில் அன்னவாசல் அடுத்துள்ள சித்தன்னவாசலில் சமணா் படுக்கை, குகை ஓவியங்கள், இசை நீரூற்று, பழங்கால கற்சிலைகள், படகு குழாம், பூங்கா என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
தீபாவளி விடுமுறையைக் கழிக்கும்விதமாக, சித்தன்னவாசலுக்கு சனிக்கிழமை வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், குகை ஓவியங்களை ரசித்தும், சிறுவா் பூங்காவில் ஊஞ்சல் ஆடியும் பொழுதுபோக்கினா்.