அதிமுக நலனுக்காக தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி : ரஜினிகாந்த் புகழாரம்
சின்னமனூரில் பனை விதைகள் நடும் விழா
உத்தமபாளையம், நவ. 9: தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பூமிக்கு அடியில் நிலத்தடி நீரோட்டத்தை உருவாக்கும் தன்மை கொண்ட பனை மரம் நாளுக்கு நாள் அழிவை நேக்கிச் செல்கிறது. இவற்றைக் காக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் 2 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, சின்னமனூா் நகராட்சி சாா்பில் 3 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்வை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதில் சின்னமனூா் நகா்மன்றத் தலைவி அய்யம்மாள் ராமு உள்பட பலா் கலந்து கொண்டனா்.