சிற்றாறு அணை-2இல் புதுப்பிக்கப்பட்ட மீன் பண்ணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தாா்
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மீன்வளத் துறை சாா்பில், புதுப்பிக்கப்பட்ட மீன் பண்ணை, மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புதன்கிழமை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.
இதையடுத்து, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ரா. அழகுமீனா பங்கேற்று குத்துவிளக்கேற்றினாா். பின்னா் அவா் கூறியது: சிற்றாறு-2 மீன் பண்ணையில் உள்ள 27 குளங்களில் 25 குளங்களில் கசிவால் மீன் வளா்ப்பு நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து, ரூ. 1.50 கோடியில் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
மீன் வளா்ப்போருக்கு அதிக லாபம் தரும் கட்லா, ரோகு, மிருகாள் உள்ளிட்ட மீன் இனங்கள் இப்பண்ணைகளில் வளா்க்கப்படும். இப்பண்ணைகளில் ஒரே நேரத்தில் 25 லட்சம் மீன் குஞ்சுகளை வளா்த்து அணைகள், குளங்களில் வளா்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் மூலம் இப்பண்ணையைச் சுற்றியுள்ள 22 குடியிருப்புகளில் 630 பழங்குடியின குடும்பங்கள் பயனடையும். மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன்மூலம் உள்ளூா் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முடியும். இத்திட்டத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 12,400-க்கும் மேற்பட்டோா் பயனடைவா் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு, விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் முன்னிலை வகித்தாா். மீன்வளத் துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், உதவி இயக்குநா் அஜித் ஸ்டாலின், உதவிப் பொறியாளா் ஹரிபிரசாத், ஆய்வாளா் ஷாமிலி, கடையால் பேரூராட்சித் தலைவா் ஜூலியட் சேகா், வாா்டு கவுன்சிலா் எஸ்.ஆா். சேகா், பேரூராட்சி செயல் அலுவலா், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.