செய்திகள் :

சிவகாமியின் சபதமும் ராமாயணமும் - 60ஸ் பெண்ணின் பாட்காஸ்ட் அனுபவம் | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

காலையில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தேன். வழக்கம் போல ஸ்பாட்டிஃபை செயலியில் போட்காஸ்ட்டில் சிவகாமியின் சபதம் கேட்டுக் கொண்டிருந்தேன். கவிதாவின் குரலில் கேட்க மிக நன்றாக இருக்கிறது.

நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்பு மென்மையான குரல் எளிய விளக்கம் என்று கேட்க புத்தகம் படிபதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அவ்வப்போது பொன்னியின் செல்வனும் கேட்டுக் கொள்வேன்.

ரெண்டையும் மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் புத்தகங்கள் மட்டும் தான் இருக்கும் நமக்கு. இப்போது வலைத்தளங்கள் , ஆடியோ புத்தகங்கள் என்று படிக்க ஏராளம் வாய்ப்புண்டு. படிப்பவர்களின் எண்ணிக்கை தான் குறைந்து கொண்டிருக்கிறது. அது வேறு சமாச்சாரம்.

சித்தரிப்புப் படம்

சிறு வயதில் வரலாறு பாடத்தில் தமிழகத்தை சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தனர் என்று படித்திருக்கிறோம். வட தமிழகத்தை மட்டுமன்றி மூவேந்தர்களையும் தன் கொற்றக் குடையின் கீழ் ஆண்டு வந்த பல்லவர்களை ஏன் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்வதில்லை என்று யோசிப்பேன்.

ஆனால் இப்போது வரலாறு படிக்கையில் பல்லவர்கள் வெளியேயிருந்து வந்த இனக்குழு என்றும் அவர்களின் ஆட்சி மொழி சமஸ்கிருதம் என்றும் மதமோ சமணம் என்றும் பிற்காலத்தில் தமிழையும் ஆட்சி மொழியாகக் கொண்டு சமணம் துறந்து சைவம் ஏற்றனர் என்றும் அறிந்தேன்.

சிவகாமியின் சபதம்

காஞ்சியை தலைநகராக கொண்டு பறந்து விரிந்திருக்கும் பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னன் மகேந்திர பல்லவன் இன்று இருக்கும் குடைவரை கோயில்களை நிர்மாணித்தவன். விசித்திரகார புலி என்ற பட்டப்பெயர் கொண்டவன். அவனுடைய அன்பிற்கு பாத்திரமானவர்கள், ஆயன சிற்பியும் அவர் மகள் நாட்டிய தாரகை சிவகாமியும். இவள் நரசிம்ம வர்மா பல்லவரின் காதலி. ஆனால் அவளை தன் மகன் நரசிம்மனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பவில்லை மகேந்திர பல்லவன்.

கீழை சாளுக்கிய மன்னன் ரெண்டாம் புலிகேசி. பல்லவ நாட்டின் மீது படையெடுத்து நாட்டை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டு ஆயன சிற்பியின் மகள் சிவகாமியை சிறையெடுத்து சென்று விடுகிறான்.

அவளைத் தேடிக் கொண்டு மாறுவேடத்தில் வந்து சந்தித்து தன்னோடு வந்து விடும்படி வேண்டுகிறான் இளவரசனும் அவளுடைய காதலுனுமான நரசிம்மன்.. ஆனால் சிவகாமியோ அவனுடன் திருட்டளவில் வருவதற்கு சம்மதிக்க மறுக்கிறாள்.

இரண்டாம் புலிகேசியை படையெடுத்து வேண்டு வாதாபியை தீக்கிரையிட்டு பின் தன்னை சிறை மீட்க வேண்டும் என்று சபதமிடுகிறாள். அதேப்போல் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு பெரும் படையுடன் வந்து புலிகேசியை வென்று சிவகாமியை மீட்கிறான்.

ராமாயணம்

ராமாயணத்தில் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதை ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள போகையில் அங்கே வந்து குதித்த அனுமார் ராமரின் கணையாழியைக் கொடுத்து சீதைக்கு நம்பிக்கை கொடுப்பார்.

சீதையை தன்னுடன் வரும்படி அவர் அழைக்கவில்லை. ஆனால் ராமர் வந்து ராவண வதம் முடித்து சீதையை சிறை மீட்பார் என்று நம்பிக்கை வார்த்தை சொல்லுவார்.

சிவகாமியின் சபதம் கேட்டுக் கொண்டிருந்த போது ஏனோ எனக்கு இந்த காட்சி கண் முன் வந்தது சரியா தவறா?

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 1 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

வெடிச் சத்தமும் வீங்கிய முதுகும் - அமெரிக்க வாழ் தமிழரின் தீபாவளி நினைவுகள் | My Vikatan

பால்ய காலத்தில், பள்ளிப் பருவத்தில் தீபாவளி என்றாலே மனது குதூகலிக்கும் ஒரு நிகழ்வு. தீபாவளி என்பது தமிழர் கொண்டாடும் விழாவா? அது தேவையா? என்ற கேள்விகளெல்லாம் மனதுக்குள் தோன்றாத ஒரு காலம். எங்கள் கிராம... மேலும் பார்க்க

`ப்ளீஸ்.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்களேன்!' - 90ஸ் கிட்ஸ் வேண்டுகோள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரியின் பார்வையில் `அன்பே சிவம்’ ! | My Vikatan

நான் ஒரு சாலையோரக் கடை வியாபாரி. சாலையில் கடை வைத்திருப்பதால், அந்த சாலையில் நிகழும் சிறு சிறு விபத்துகளின் போது முதலுதவி செய்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகிவிட்டது. விபத... மேலும் பார்க்க

'5 வகையான நண்பர்கள் உங்களுக்கு இருக்க வேண்டும்' - உங்க நண்பர் இதில் எந்த ரகம்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க