செய்திகள் :

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்.... டைட்டில் டீசர் வெளியீடு!

post image

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் இணைந்துள்ள புதிய படமான ‘மதராஸி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 23-வது படமான இதில் துப்பாக்கி பட வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கின்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு சில வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

பொங்கலை முன்னிட்டு டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் டைட்டில் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

மதராஸி

இதனைத் தொடந்து, எஸ்கே - 23 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ’மதராஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது

முகை மழை... டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் வெளியானது!

நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் முதல் பாடலான ‘முகை மழை’ இன்று வெளியாகியுள்ளது.நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன. இவர் தற்... மேலும் பார்க்க

விடாமுயற்சி ‘சவதீகா’ பாடல் விடியோ!

விடாமுயற்சி படத்திலிருந்து சவதீகா பாடல் விடியோ வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருந்தது.‘மங்காத்தா’ ... மேலும் பார்க்க

சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்

சென்னை: எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான மதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ், சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம் என்று இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியிருக்கிற... மேலும் பார்க்க

லிஜோ மோல் நடிக்கும் ஜென்டில்வுமன்... முதல் பாடல் வெளியீடு!

லிஜோமோல் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக ஜென்டில்வுமன் திர... மேலும் பார்க்க

புதிய தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி ஷாலினி கெட்டி மேளம் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது... மேலும் பார்க்க

வார பலன்கள்: கே.சிஎ.ஸ் ஐயர் கணித்தது!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 21 - 27) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)பொருளாதாரம் உயரும்.... மேலும் பார்க்க