செய்திகள் :

சீனா டு தூத்துக்குடி; துறைமுகத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான சீன `பைப்' பட்டாசுகள் -விவரம் என்ன?

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தி விற்கப்படுகிறதா என, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சீன துறைமுகமான நிங்பேவில் இருந்து கன்டெய்னர்கள் ஏற்றப்பட்ட கப்பல் வந்தது. அதில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வந்த 2 கன்டெய்னர்களில் இன்ஜினீயரிங் உபகரணங்கள், சிறிய தட்டையான டிராலிகள் இருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அந்த கன்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

அந்த கன்டெய்னர்களில் சிலிக்கன் சீலென்ட்கன் எனப்படும் தகரம், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் ஒட்டுவதற்கு பயன்படும் உபகரணங்களும், அதற்கான சிலிக்கான் பசை போன்ற பொருட்களும் இருந்தன. மேலும் அவற்றுக்கு பின்னே 8,400 அட்டைப் பெட்டிகளில் சீன பட்டாசுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகும். கன்டெய்னர்களில் இருந்த பொருட்களுடன் சீன பட்டாசுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் சீன பட்டாசுகளை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தொழில் அதிபர்கள் சிலர் என்ஜினீயரிங் பொருட்கள் பெயரில் ஆவணம் தயாரித்து, சீன பட்டாசுகளை கன்டெய்னர்களில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்கள் விகாஷ் பட்டேஷ்வர் தவுபி, தசரத் மச்சீந்தரா கோக்கரே ஆகிய 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். சீனபட்டாசு இறக்குமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள பைப் வகை சீன பட்டாசுகளை கையில் வைத்துக்கொண்டே வெடிக்கலாம். ஒரே பைப் வெடியில் இருந்து 288 ஷார்ட்கள் வானில் 200 மீட்டர் உயரத்திற்கு சென்று வெடிக்கும் தன்மையுடையது.

இதேபோன்று அதே நிங்போ துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மற்றொரு கப்பலில் கன்டெய்னர்கள் வந்தன. அதில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு வந்த 4 கன்டெய்னர்களில் ஹெல்மெட், விளையாட்டு உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அந்த கன்டெய்னர்களை திறந்து சோதனை செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சீன பைப் பட்டாசுகள்

அதில், சட்ட விரோதமாக சீனாவில் இருந்து விளையாட்டு பொம்மைகள் மற்றும் ஷூக்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இவற்றினை இந்தியாவிற்குள் கொண்டு வர தரச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றவை என்பதால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியாகும். இதனை கடத்தி வந்தது யார்? என்பது குறித்தும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை: 72 வயது தொழிலதிபர் டிஜிட்டல் கைது; 6500 வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட ரூ.58 கோடி!

மும்பையை சேர்ந்த 72 வயது பங்குச்சந்தை வியாபாரியை சைபர் கிரிமினல்கள் தங்களை அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் என்று கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.52 கோடியை வாங்கிக்கொண்டனர். முதியவர் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர்களது குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறது.... மேலும் பார்க்க

``குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ - எச்சரிக்கும் காவல்துறை!

வரும் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக குறைந்த விலைக்க... மேலும் பார்க்க

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி திண்டுக்கல் சிறையில் அடைத்த மறுநாளே மரணம் - பின்னனி என்ன?

கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனைக் கடத்தி ஒரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்தக் கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார... மேலும் பார்க்க

சபரிமலை: தங்கம் மோசடி வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போற்றி நள்ளிரவில் கைது; 10 மணி நேரம் விசாரணை!

சபரிமலை தங்க கவசம்சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் துவாரபாலகர் சிலை ஆகியவை செம்பு உலோகத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1999-ம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா தங்கம் பதிக்க சுமார் 30 கிலோ தங்கம் வழங்க... மேலும் பார்க்க

கரூர் 41 பேர் பலியான சம்பவம்: சி.பி.ஐ விசாரணை இன்று முதல் தொடக்கம் - பின்னணி என்ன?

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்நிலையில், தமிழக அரசு ஓய்வு பெற்ற உ... மேலும் பார்க்க